Breaking News
Home / செய்திகள்

செய்திகள்

கேள்வியும், பதில்களும்: இத்தனை நாட்கள் எங்கு இருந்தீர்கள்?

நடிகர் கமல்ஹாசன் இன்று புதிய கட்சியை தொடங்கியுள்ளார். மதுரையில் நடைபெற்ற முதல் அரசியல் மாநாட்டில் கட்சிக் கொடியை ஏற்றிய அவர், கட்சிப் பெயரை அறிவித்தார். கட்சிப் பெயர் “மக்கள் நீதி மய்யம்”. அவரது கொடி வெள்ளை நிறத்தில் உள்ளது. அதில் 6 இணைந்த கைகள் உள்ளன. 3 கைகள் வெள்ளை நிறத்திலும், 3 கைகள் சிவப்பு நிறத்திலும் உள்ளது. அதற்குள் வெள்ளை நட்சத்திரத்தை சுற்றி கருப்பு நிற வளையம் இருப்பதாக …

Read More »

சொந்த ஊரிலேயே இவர் பேசவில்லை, தலைவர் இப்படி சொதப்புகிறாரே

நடிகர் கமல்ஹாசன் தனது அரசியல் பிரவேசத்தின் முதல் கட்டமாக கட்சியின் பெயரையும், கொள்கைகளையும் இன்று மாலை மதுரையில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் அறிவிக்கிறார். இதனையடுத்து இன்று காலை ராமேஸ்வரத்தில் உள்ள முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் இல்லத்தில் இருந்து தனது அரசியல் சுற்றுப் பயணத்தை தொடங்கினார். பின்பு, ராமேஸ்வரம் மீனவர்களைச் சந்தித்து அவர்களின் குறைகளைக் கேட்க திட்டமிட்டிருந்தார். ஆனால், நேரமின்மை காரணமாக மீனவர்களிடம் சில நிமிடங்கள் மட்டுமே பேசிவிட்டு கிளம்பினார். …

Read More »

வாகன ஓட்டிகள் எச்சரிக்கையுடன் இருக்குமாறு கேட்டுக்கொண்டுள்ளனர்.

ஜேர்மனியில் North Rhine-Westphalia-ல் உள்ள பொலிஸர் வழக்கத்திற்கு மாறாக அதிகளவு பனிப்பொழிவு இருப்பதால் சாலைகள் ஆபத்தான நிலைக்கு மாறியுள்ளது எனவே வாகன ஓட்டிகள் எச்சரிக்கையுடன் இருக்குமாறு கேட்டுக்கொண்டுள்ளனர். மேலும் ஜேர்மன் வானிலை மையம் upper Bavaria பகுதிக்கும், மேற்கு ஜேர்மனி பகுதிக்கும் வியாழன் காலை பயண எச்சரிக்கை விடுத்துள்ளது. “இங்கு கடுமையான பனிப்பொழிவு இருப்பதால் வாகனங்கள் விபத்தில் சிக்கி கொள்வதை தடுக்கும் விதமாக இந்த எச்சரிக்கை விடப்பட்டுள்ளது” என்று பொலிஸ் …

Read More »

பங்களாதேஷ் அணிக்கெதிரான முதலாவது இருபதுக்கு – 20 போட்டியில்

பங்களாதேஷ் அணிக்கெதிரான முதலாவது இருபதுக்கு – 20 போட்டியில் 6 விக்கெட்டுகளால் அபார வெற்றியீட்டிய இலங்கை 2 போட்டிகள் கொண்ட தொடரில் 1-0 என முன்னிலை பெற்றுள்ளது. பங்களாதேஷுக்கு கிரிக்கெட் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை அணி அவ்வணியுடன் 2 போட்டிகள் கொண்ட இருபதுக்கு – 20 தொடரில் பங்கேற்று விளையாடி வருகின்றது. இந்நிலையில் பங்களாதேஷின் டாக்கவில் இன்று இடம்பெற்ற முதலாவது இருபதுக்கு – 20 போட்டியில் நாணயச்சுழற்சியில் வெற்றிபெற்ற பங்களாதேஷ் …

Read More »

ரஜினிக்கு நெருக்கமான இந்த ராஜூ மகாலிங்கம் யார்?

ரஜினிகாந்த தன்னுடைய அரசியல் பயண அறிவிப்புக்கு பின்னர் கட்சி தொடங்குவதற்கான வேலைகளில் தீவிரமாக இறங்கியுள்ளார். இதில் முதல் கட்டமாக ரஜினி மக்கள் மன்ற மூலம் உறுப்பினர்களை சேர்க்கும் பணியை முடுக்கிவிட்டுள்ளார். அதேபோல் ரஜினி மக்கள் மன்றத்திற்கான மாவட்ட நிர்வாகிகளை நியமிப்பதிலும் தீவிரம் காட்டப்பட்டு வருகிறது. மாவட்ட நிர்வாகிகளை நியமிப்பது, அவர்கள் மூலம் உறுப்பினர்களை சேர்ப்பது என்று வேலைகள் வேகமெடுக்க தொடங்கியுள்ளது. இந்த நிலையில் ரஜினி மக்கள் மன்றத்திற்கான மாநில செயலாளராக …

Read More »

ரூ.5,100 கோடி மதிப்புள்ள தங்கம், வைரங்களை அமலாக்கத்துறையினர் பறிமுதல் செய்தனர்.

நிரவ் மோடி மற்றும் அவரது நண்பர்களுக்கு சொந்தமான இடங்களில் இருந்து ரூ.5,100 கோடி மதிப்புள்ள தங்கம், வைரங்களை அமலாக்கத்துறையினர் பறிமுதல் செய்தனர். இந்தியாவின் இரண்டாவது மிகப் பெரிய அரசு வங்கியான பஞ்சாப் நேஷனல் வங்கி, பங்குச் சந்தைக்கு (பிஎஸ்இ) அனுப்பியுள்ள அறிக்கையில் ரூ.11000 கோடி முறைகேடு நடந்ததாக தெரிவித்துள்ளது. இதை கடந்த 10 நாட்களுக்கு முன்னர் அதிகாரிகள் நடத்திய சோதனையில் கண்டுபிடிக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது. இந்த மோசடி வழக்கில் பிரபல நகைக் …

Read More »

தென்ஆபிரிக்காவின் புதிய ஜனாதிபதியாக

தென் ஆபிரிக்க ஜனாதிபதி ஜேக்கப் ஜுமா பதவி விலகிய​தையடுத்து தென் ஆபிரிக்காவின் புதிய ஜனாதிபதியாக சிரில் ரமபோஷ பதவியேற்றுள்ளார்.

Read More »

கூட்டு எதிர்க்கட்சியுடன் இணைந்து அரசாங்கம் ஒன்றை அமைப்பதற்கு

கூட்டு அரசாங்கத்தை தொடர்ந்து முன்கொண்டு செல்வதற்கு தீர்மானித்துள்ளதாக ஐக்கிய தேசிய கட்சியின் பொதுச் செயலாளர் கபீர் ஹாசிம் கூறியுள்ளார். அதேவேளை ஐக்கிய தேசிய கட்சிக்குள் மாற்றங்களை மேற்கொள்வதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார். பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுடன் ஐக்கிய தேசிய கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் நடத்திய கூட்டத்தில் இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டதாக அவர் ஊடகங்களிடம் கூறினார். இதேவேளை கூட்டு எதிர்க்கட்சியுடன் இணைந்து அரசாங்கம் ஒன்றை அமைப்பதற்கு ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு …

Read More »

பாடசாலையில் துப்பாக்கி சூட்டில் குறைந்தது 17 பேர் உயிரிழந்தனர்

அமெரிக்காவின் புளோரிடா மாநிலத்தில் உள்ள பார்க்லாண்ட்டில் உள்ள பாடசாலை ஒன்றில் நடந்த துப்பாக்கி சூட்டில் குறைந்தது 17 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதல் சம்பவத்தில் ஈடுபட்ட சந்தேக நபரின் பெயர் 19 வயதான நிகோலாஸ் குரூஸ் என்று கூறப்படுகிறது. இப்பாடசாலையின் முன்னாள் மாணவரான இவர் பாடசாலையில் இருந்து நீக்கப்பட்டிருந்தார். பாடசாலையின் உள்ளே துப்பாக்கிசூடு நடத்துவதற்கு முன்பு இவர் பாடசாலை வளாகத்துக்கு வெளியே துப்பாக்கி சூடு நடத்தியுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். கடந்த …

Read More »

கொள்ளையன் நாதுராம் போலீஸாரின் விசாரணையில் தனது திருட்டு வரலாற்றை கூறியுள்ளான்.

கொள்ளையன் நாதுராம் போலீஸாரின் விசாரணையில் தனது திருட்டு வரலாற்றை கூறியுள்ளான். கடந்த ஆண்டு நவம்பர் மாதம் கொளத்தூரில் உள்ள முகேஷ்குமார் என்பவரின் நகைக் கடையில் மேற்கூரையை துளையிட்டு மூன்றரை கிலோ தங்க நகைகள் கொள்ளையடிக்கப்பட்டன. இதுதொடர்பாக ராஜஸ்தானைச் சேர்ந்த நாதுராம், அவரது கூட்டாளிகள் தினேஷ் சவுத்ரி, பக்தாராம் ஆகியோரை கைது செய்ய, ராஜஸ்தானில் நடந்த துப்பாக்கிச் சண்டையில் ஆய்வாளர் பெரியபாண்டியன் உயிரிழந்தார். இந்த சம்பவம் தமிழகத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. …

Read More »