Home / செய்திகள் / ஜேர்மன் / ஜேர்மன் பள்ளியில் 14 வயது சிறுவன் கொலை

ஜேர்மன் பள்ளியில் 14 வயது சிறுவன் கொலை

மேற்கு ஜேர்மன் மாநிலமான வடக்கு ரைன்-வெஸ்ட்பாலியாவில் லுன்னனில் உள்ள ஒரு பள்ளியில் செவ்வாய்க்கிழமை அதிகாலையில் 15 வயதான மாணவன் 14 வயது சக மாணவன் தாக்கியதால் கொல்லபட்டுள்ளான்.

பொலிஸார் சந்தேக நபரை பிடித்து விசாரித்ததில் கொலையை ஒப்புக்கொண்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த சம்பவம் 8 ஆம் தேதி உள்ளூர் நேரம் (0700 UTC) அளவில் காட் கொல்விட்ஸ் பள்ளியில் நிகழ்ந்துள்ளது.

1,000 மாணவர்கள் உள்ள இந்த பள்ளி பின்னர் காலி செய்யப்பட்டு மூடப்பட்டது.

சந்தேக நபர் ஆன அந்த சிறுவன் காட் கோல்விட் பள்ளியில் ஒரு முன்னாள் மாணவராக இருந்துள்ளான், ஆனால் பின்னர் நடத்தை சிக்கல்களால் மற்றொரு பள்ளிக்கு மாற்றப்பட்டு உள்ளான்.