Home / செய்திகள் / இந்தியா / உண்மையில் அவர்கள் இருவருக்கும் பிரச்சினை இருந்ததா அப்படி என்னதான் பிரச்சினை;

உண்மையில் அவர்கள் இருவருக்கும் பிரச்சினை இருந்ததா அப்படி என்னதான் பிரச்சினை;

நேதாஜி என்றவுடன் தோன்றுவது வீரமும் , தேசப்பற்றும் . அதேபோல் ‘ காந்தி என்றவுடன் நமக்குத் தோன்றுவது அகிம்சை இன்று நேதாஜியைப் புகழ்பவர்கள் பெரும்பாலும் , காந்தியின் மீது விமர்சனும் கொண்டவர்களாகவே இருக்கிறார்கள் .

உண்மையில் அவர்கள் இருவருக்கும் பிரச்சினை இருந்ததா அப்படி என்னதான் பிரச்சினை அவர்களுக்குள் சரியாகப் பார்த்தால் இவ்விருவரும் விடுதலை என்ற ஒரே இடத்தை நோக்கிச் செல்லும் இரு வேறு பாதை களாகவே கடைசிவரை இருந்தனர் . அந்தப் பாதைகள் சந்திக்கும் இடங்கள் , பெரும்பாலும் மோதிக்கொள்ளும் இடங்களாகவே இருந்தன .   நேதாஜிக்கும் காந்திக்கும்  அடிப்படை வேறுபாடு இருந்தது . ” சுதந்திரம் என்பது தருவது அல்ல , பெறுவது ‘ என்பதே நேதாஜி வழி . காந்தியோ , நம்சுதந்திரத்தைப் பெறுவதற்குக் கூட அடுத்தவர்களை இம்சிக்காமல் நம்மை நாமே இம்சித்துக் கொள்ளும் வகையிலான போராட்ட முறைகளைக் கையாண்டவர் .

இருவரும் போராடியது இந்தியசுதந்திரத்திற்காகத்தான் என்றாலும் வழி முற்றிலும் வேறு . தனித்தனியே சென்ற அவர்களின்பாதை சந்தித்துக் கொண்ட இடங்கள் சில உண்டு .

1989இல் இரண்டாம் முறையாக நேதாஜி , இந்திய தேசிய காங்கிரசின் தலைவருக்கான தேர்தலில் போட்டியிட்டார் . அவருக்கு எதிராக ராஜேந்திர பிரசாத்தையும் , நேருவையும் போட்டியிடுமாறு காந்தி வற்புறுத்தினார் . அவர்கள் மறுக்க ஆகவே பட்டாபி சீதாராமையாவை நிறுத்தினார் ஏறத்தாழ போஸ் 180 வாக்குகளுடனும் , தோராமன் 1371 வாக்குகளுடன் இருந்தனர் . சீதாராமையாவின் தோல்வி , தனக்கு பெரிய இழப்பு என்று வெளிப்படை யாகக் கூறி காந்தி உண்ணாவிரதம் இருந்தார்

அவரை சமாதானப்படுத்த மற்றத் தலைவர்கள் முயன்றதும் நேதாஜி காங்கிரசில் இருந்து விலகும் சூழ்நிலை உருவானது . இது ஒரு நேரடி மோதலாகவே இருந்தது அதன்பின்னர் நேதாஜி ஃபோர்வர்ட் பிளக் ‘ கட்சியை ஆரம்பித்து தன் வழியில் சென்றார் 1945இல் தாய்வான் நாட்டில் ஒரு விமான விபத்தில் நேதாஜி உயிரிழந்ததாக செய்தி வந்தபோது , முதலில் மறுத்தே வந்தார் காந்தி , சுபாஷ் சந்திரபோலின் குடும்பத்தாரிடம் இறுதிச் சடங்குகள் எதுவும் செய்ய வேண்டாம் நேதாஜி உயிருடன் இருப்பார் என்று என் உள்மனம் சொல்கிறது என்று கூறியதாக நேதாஜியின் உறவினர் பின்னாளில் தெரிவித்தார் அப்போது காந்திக்கு ரஷ்யாவிலிருந்து நேதாஜியின் மரணத்தைப் முற்றிய இரகசிய தகவல் வந்ததாகவும் , அதன் அடிப்படையிலேயே அவ்வாறு கூறியதாகவும் மக்கள் மத்தியில் பசபடட து இன்று வரை நேதாஜியின் மரணம் குறித்த மர்மம் தொடர்கிறது .

அதனைப் பற்றிய ஆவணங்களை வெளியிடுவோம் என்பதையும் ஒரு தேர்தல் வாக்குறுதியாகக் கொடுத்தது பாஜக , மற்றைய அனைத்துவாக்குறுதிகளையும் போல இதையும் நிறைவேற்றவில்லை சுதந்திர இந்தியா பற்றிய கனவுகள் கூட இருவருக்கும் வேறு வேறாய் இருந்தன .

நேதாஜி , அறிவியலில் முன்னேறிய , தொழிலில் சிறந்த வலிமையான இராணுவத்தைக் கொண்ட நாடாக இந்தியா உருவாக வேண்டுமென்று எண்னிணார் , பலஇடங்களில் அதை வெளிப்படுத்தியுள்ளார் . காந்தியின் கனவு இந்தியாவோ அமைதியும் மத நல்லிணக்கமும் விவசாயம் செழித்ததுமாக இருந்தது . இந்த இரண்டுபேர் கண்டதுமாகவும் இல்லாமல் இன்றைய இந்தியா இருப்பதுதான் வேதனை.