Home / செய்திகள் / தொழில்நுட்பம் / (இன்டர்நெட்) இன்றி எதுவும் செய்ய முடியாது

(இன்டர்நெட்) இன்றி எதுவும் செய்ய முடியாது

அணுவின்றி இயங்காது உலகம் என அறிவியலாளர்கள் கூறுவர். அதுபோல, இன்றைய தலைமுறையினருக்கு இணையம் (இன்டர்நெட்) இன்றி எதுவும் செய்ய முடியாது என்ற நிலைக்கு தகவல் தொழில்நுட்பம் வளர்ந்துள்ளது. இணையம் மூலம் நமக்கு தேயைான பல்வேறு தகவல்களை அறிந்து கொள்ள முடிகிறது.முன்பெல்லாம் ஏதாவது ஒரு தகவல் பற்றி அறிய வேண்டுமெனில் அது பற்றி தெரிந்தவர்களிடமோ அல்லது புத்தகத்தையோ தேடிச்செல்வோம். ஆனால், இன்று எந்தவொரு தகவல் வேண்டுமென்றாலும் இணையத்தை பார்த்து தெரிந்துகொள்ளும் பழக்கம் அதிகரித்துவிட்டது.

ஒவ்வொரு நாடுகளிலும் எவ்வளவு பேர் இணையத்தை பயன்படுத்துகின்றனர் என்ற கருத்துக்கணிப்பை ஜெர்மனியை சேர்ந்த ஸ்டேட்டிஸ்டா என்ற அமைப்பு நடத்தியது. மொத்தம் 23 நாடுகள் இதில் பங்கேற்றன. இப்பட்டியலில் இந்தியா முதலிடத்தை பெற்றுள்ளது.இந்தியாவில் கருத்துக்கணிப்பில் பங்கேற்றவர்களில் 83 சதவீதம் பேர் இணையம் இன்றி தங்களால் எதுவும் செய்ய இயலாது என தெரிவித்துள்ளனர். பட்டியலின் இரண்டாம் இடத்தில் பிரிட்டனும், மூன்றாம் இடத்தில் சீனாவும் உள்ளன.நன்மைகள் : இன்டர்நெட் மூலம் இன்று அனைத்தும் சாத்தியமாக்கலாம். ரயில், பஸ், விமானம், ஆகியவற்றில் பயணம் செய்வதற்கு டிக்கெட் பெற வேண்டுமெனில் கால்கடுக்க கியூவில் நிற்க வேண்டாம்.

இன்டர்நெட்டின் பயனாக நமது அலைபேசியில் இருந்து கூட செய்யலாம். அதேபோல, பொழுதுபோக்கிற்கும் இன்டர்நெட் வசதியாக உள்ளது. மாணவர்களின் கல்விக்கும் இணையம் பெருமளவில் பயனுள்ளதாக உள்ளது.தீமைகள் : எந்தவொரு அறிவியல் தொழில்நுட்பத்திலும் நன்மை எந்தளவிற்கு உள்ளதோ, அதேஅளவில் தீமையும் உள்ளது. அதேலோல, இணையம் மூலமாக வைரஸ் தாக்குதல், பாலியல் குற்றங்கள், லாட்டரி மோசடிகள், வங்கிக்கணக்கு மற்றும் பாஸ்வேர்டுகளை திருடுதல், இணையதளங்களை முடக்குவது போன்ற சைபர் குற்றங்கள் நடக்கின்றன.