Home / செய்திகள் / இலங்கை / காலை முதல் இர­வு­வரை நடத்த முடி­யும் என்று

காலை முதல் இர­வு­வரை நடத்த முடி­யும் என்று

பிணை­முறி அறிக்கை மற்­றும் இலஞ்ச ஊழல் குற்­றச்­சாட்­டு­களை விசா­ர­ணை­செய்த ஆணைக்­கு­ழு­வின் அறிக்கை ஆகி­ய­வற்­றின் மீதான விவா­தத்தை 6ஆம் திகதி காலை முதல் இர­வு­வரை நடத்த முடி­யும் என்று சபை முதல்­வ­ரும் அமைச்­ச­ரு­மான லக்ஸ் மன் கிரி­யெல்ல தெரி­வித்­தார்.

இது தொடர்­பில் தலைமை அமைச்­சர் ரணில் விக்­கி­ர­ம­சிங்­க­ வால் சபா­நா­ய­க­ருக்கு அறி­விக்­கப்­பட்­டுள்­ளது என­வும் அவர் கூறி­னார்.
‘பிணை­முறி மற்­றும் இலஞ்ச ஊழல் அறிக்­கை­கள் தொடர்­பில் விவா­திக்க உள்­ளூ­ராட்சி சபைத் தேர்­த­லுக்கு முன்­னர் ஒரு தினத்தை ஒதுக்­கித் தரு­மாறு மக்­கள் விடு­தலை முன்­ன­ணி­யின் தலை­வர் அநு­ர­கு­மார திசா­நா­யக்க சபா­நா­ய­க­ருக்கு கடி­த­மொன்றை அனுப்பி வைத்­தி­ருந்­தார். அவ­ரின் கோரிக்­கைக்கு அமை­வாக 8ஆம் திகதி விவா­தம் நடத்த ஏற்­பாடு செய்­யப்­பட்­டி­ருந்­தது.

இது தொடர்­பில் தீர்­மா­னம் எடுக்­கக்­கூ­டிய கட்­சித் தலை­வர்­கள் கூட்­டத்­தில் 8ஆம் திக­திக்கு முன்­னர் குறித்த விவா­தத்தை நடத்த வேண்­டு­மென அமைச்­சர் மகிந்த சம­ர­சிங்க தெரி­வித்­தார்.
தேர்­தல் பரப்­பு­ரை­யின் உச்­சக்­கட்­டம் 6ஆம் திக­தி­யாக இருக்­கின்­றது.

அன்­றைய தினம் நடை­பெ­ற­வுள்ள அமைச்­ச­ர­வைக் கூட்­டத்தை இல்­லா­மல் செய்ய மைத்­திரி இணங்­கி­னார். அத­னால்­தான் அன்­றைய தினம் விவா­திக்க முடி­வெ­டுக்­கப்­பட்­டது, என்­றார் லக்ஸ்­மன் கிரி­யெல்ல.