Home / செய்திகள் / ஜேர்மன் / வாகன ஓட்டிகள் எச்சரிக்கையுடன் இருக்குமாறு கேட்டுக்கொண்டுள்ளனர்.

வாகன ஓட்டிகள் எச்சரிக்கையுடன் இருக்குமாறு கேட்டுக்கொண்டுள்ளனர்.

ஜேர்மனியில் North Rhine-Westphalia-ல் உள்ள பொலிஸர் வழக்கத்திற்கு மாறாக அதிகளவு பனிப்பொழிவு இருப்பதால் சாலைகள் ஆபத்தான நிலைக்கு மாறியுள்ளது எனவே வாகன ஓட்டிகள் எச்சரிக்கையுடன் இருக்குமாறு கேட்டுக்கொண்டுள்ளனர்.

மேலும் ஜேர்மன் வானிலை மையம் upper Bavaria பகுதிக்கும், மேற்கு ஜேர்மனி பகுதிக்கும் வியாழன் காலை பயண எச்சரிக்கை விடுத்துள்ளது.

“இங்கு கடுமையான பனிப்பொழிவு இருப்பதால் வாகனங்கள் விபத்தில் சிக்கி கொள்வதை தடுக்கும் விதமாக இந்த எச்சரிக்கை விடப்பட்டுள்ளது” என்று பொலிஸ் செய்திதொடர்பாளர் ஒருவர் ஊடகங்களுக்கு தெரிவித்தார்.

Düsseldorf பகுதியை சுற்றி மோசமான வானிலை நிலவுகிறது அங்கு உள்ள A46 சாலையில் இருந்து North Rhine-Westphalia நகர் வரை செல்லும் சாலையில் 20 கிலோமீட்டர் தூரம் வரை கடும் பனியில் சிரமப்பட்டு வாகனங்கள் இயக்கப்படுவதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Kreuz Kamp-Lintfort மற்றும் Meerbusch இடையே உள்ள A57 சாலையிலும் இதே நிலை நீடிக்கின்றது.

ஏற்கெனவே கடும்பனிப்பொழிவினால் இரண்டு விபத்துக்கள் ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்