Home / செய்திகள் / இலங்கை / 11 பேர் கடத்தப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய முக்கிய

11 பேர் கடத்தப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய முக்கிய

கொழும்பில் 11 பேர் கடத்தப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய முக்கிய சந்தேக நபர் தப்புவதற்கு உதவி செய்தார் என்ற குற்றச்சாட்டிற்கு இலக்காகியுள்ள முப்படைகளின் பிரதானி அட்மிரல் ரவீந்திர விஜேகுணரட்ண உடனடியாக கைதுசெய்ய்பபடும் அபாயத்தை எதிர்கொள்கின்றார் என எக்கனமி நெக்ஸ்ட் தெரிவித்துள்ளது.

இது குறித்து மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

இலங்கையின் கடற்படை தளபதியாக பதவி வகித்தவேளை முக்கிய சந்தேகநபரான நேவி சம்பத்தை ரவீந்திர விஜேகுணரட்ண காப்பாற்றினார் என இலங்கையின் குற்றப்புலனாய்வு பிரிவினர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை நீதிக்கு தடையாக உள்ள எவரையும் கைதுசெய்வதற்கு தடைகள் எதுவுமில்லை என  நீதிபதி இலங்கை குற்றப்புலனாய்வு திணைக்கள அதிகாரிகளிற்கு தெரிவித்துள்ளார்.

முக்கியசந்தேகநபரை கைதுசெய்வதை தடுத்துவருபவர்கள் குறித்து விசாரணையை மேற்கொள்வதற்கான முயற்சிகளிலும் நீதிமன்றம் ஈடுபட்டுள்ளது.

2008 முதல் 2009 வரையான காலப்பகுதியில் கொழும்பில் 11 பேர் காணாமல்போன விவகாரத்தில் முக்கிய சந்கேதநபராக முன்னாள் கடற்படை தளபதி அட்மிரல் வசந்த கரணாகொடவின் உதவியாளரான நேவிசம்பத் என அழைக்கப்படும் பிரசாத் ஹெட்டியாராச்சி காணப்படுகின்றார்.

முன்னைய அரசாங்கத்தின் காலத்தில் வசந்த கரணாகொடவே நேவி சம்பத்திற்கு எதிராக முறைப்பாடு செய்திருந்தார்.

எனினும் அரசியல்ரீதியில் செல்வாக்குள்ள சக்திகள் நேவிசம்பத்திற்கு பாதுகாப்பு அளித்ததன் காரணமாக அவரை கைதுசெய்ய முடியாத நிலை காணப்பட்டது.

தற்போதைய முப்படை பிரதானி சந்தேகநபரிற்கு அடைக்கலம் கொடுத்தார் என்பதற்கான ஆதாரங்களும் அவர் நாட்டை விட்டு தப்பிச்செல்வதற்கு உதவினார் என்பதற்கான ஆதாரங்களும் உள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

யுத்தம் தீவிரமாக இடம்பெற்ற நாட்களில் நேவி சம்பத் பணத்திற்காக ஆட்களை கடத்தும் நடவடிக்கைகளில் ஈடுபட்டார்.

வர்த்தகர்களின் பிள்ளைகளை அவரும் அவருடைய சகாக்களும் கடத்தி கப்பம் பெற்றுள்ளனர்என குற்றச்சாட்டுகள் வெளியாகியுள்ளன.

பெற்றோர்கள் பணம் கொடுத்ததன் காரணமாக சிலர் விடுவிக்கப்பட்டனர் அதேவேளை வேறு சிலர் கொல்லப்பட்டனர் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.